விக்ரமுடன் இணையும் ஹாலிவுட் நடிகர்... வேற லெவலில் ‘தங்கலான்’

thangalaan

 விக்ரமின் ‘தங்கலான்’ படத்தில் ஹாலிவுட் நடிகர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பா ரஞ்சித இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தங்கலான்’. இந்த படத்தில் மிரட்டலான லுக்கில் நடிகர் விக்ரம் நடித்து வருகிறார். இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

thangalaan

கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ப்ரீயட் படமாக இப்படம் உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 

thangalaan

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கேஜிஎப் பகுதியில் நடைபெற்று வருகிறது. அதில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் டேனியல் கல்டாஜிரோன் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ‘ஹண்ட்மேன்’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Share this story