ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: இதுவல்லவோ வெற்றி!..... ஹாலிவுட் பிரபலம் 'கிளின்ட் ஈஸ்ட்வுட்' போட்ட பதிவு வைரல்.

photo

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த தீபாவளிக்கு வெளியான படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்த படம் மக்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்று அதிகம் பேசப்பட்டது. இந்த நிலையில் படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் ஹாலிவுட் பிரபலம் கிளின்ட் ஈஸ்ட்வுடை டேக் செய்து " ஹாய் கிளின்ட் நாங்கள் இந்தியர்கள் தமிழில் ஹிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற படம் வந்துள்ளது. அது நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உள்ளது. இது உங்களுக்கான அங்கீகாரம். இதில் நீங்கள் இளம் வயதில் இருக்கும் அனிமேஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. நேரம் இருக்கும் பட்சத்தில் படத்தை பாருங்கள் என கூறியிருந்தார்."


அதற்கு பதிலாக " கிளின்ட் இந்த படத்தை juror பட வேளைகளை முடித்து பின்னர் பார்ப்பார். நன்றி' என பதிவிடப்ப்ட்டுள்ளது.

Share this story