"என்ன செருப்பால அடிங்க" - ஹாட்ஸ்பாட் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் குமுறல்!!

tn

தமிழ்நாட்டில் தற்போது பெரிய பட்ஜெட் படம்,  சிறிய பட்ஜெட் படம் என்ற வேறுபாடு இன்றி கதை களத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து  தரமான திரைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் வெளியான ஹாட்ஸ்பாட் திரைப்படம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது எனலாம்.  கடந்த மார்ச் 25ஆம் தேதி வெளியான இத்திரைப்படத்தில் கலையரசன், சோபியா, சாண்டி, அம்மு அபிராமி, ஜனனி உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  இப்படத்தை இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார்.

vignesh karthick about Hot Spot Tamil Movie

நான்கு கதைகளைக் கொண்ட திரைக்கதை உடன் இப்படம் எடுக்கப்பட்ட நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் எதிர்மறை விமர்சனங்களை பெற்றது.  ஆனால் சுவாரசியமான திரைக்கதையுடன் நான்கு கதைகளை இயக்குனர் சிறப்பான முறையில் படைத்திருப்பதாக சிறப்பு திரையிடலை பார்த்த விமர்சகர்கள் கருத்து கூறினர்.  இப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதால் குடும்ப ரசிகர்கள் தவிர்க்கும் மனப்பான்மையை இப்படம் ஏற்படுத்தியது.  ஆனால் படம் வெளியான பிறகு பாசிட்டிவான விமர்சனங்கள் தற்போது கிடைத்துள்ளது.

tnt

 ஆனாலும் குடும்ப ரசிகர்கள் கூட்டம் இப்படத்தைப் பார்க்க திரையரங்குகளுக்கு வரவில்லை என்பது படக்குழுவுக்கு சற்று பின்னடைவை கொடுத்துள்ளது. இந்நிலையில்  செய்தியாளர்களை சந்தித்த இப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்,  பெரிய  நடிகர்களின் படங்களை தவிர சின்ன படங்களுக்கு பெரிதாக முதல் நாள் வரவேற்பு இல்லை . ஒரு வாரத்தில் அத்தனை படங்கள் வெளியாகின்றன.  கூட்டம் வராததால் அந்த படங்கள் இரண்டு நாட்கள் கூட திரையரங்குகளில் ஓடுவதில்லை.  இப்படியான சூழலில் படம் மீது கவனத்தை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் திரைப்படத்தின் டிரைலரை அப்படி வெளியிட்டோம்.  உண்மையில் ஒரு நல்ல கருத்தை சுவாரசியமாக இந்த படத்தில் சொல்ல முயற்சித்து இருக்கிறோம். படம் பார்த்த அனைவரும் பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்துள்ளனர்.  நாங்கள் எதிர்பார்த்த கூட்டம் இப்படத்திற்கு வரவில்லை. ரசிகர்களிடம் நான் கேட்டுக் கொள்வது இந்த படத்தை திரையரங்குகளில் இருந்து பாருங்கள். உங்களுக்கு படம் பிடிக்கவில்லை என்றால் என்னை செருப்பால் கூட அடியுங்கள் என்று கூறியுள்ளார்.

Share this story