ஜீவாவின் ‘பிளாக்’ ட்ரெய்லர் எப்படி? - மர்மமும் விறுவிறுப்பும்!
ஜீவா நடித்துள்ள ‘பிளாக்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ட்ரெய்லர் எப்படி? - ஒரு வீடு, இரண்டு கதாபாத்திரங்கள் என்றே பெரும்பாலான ட்ரெய்லர் காட்சிகள் நகர்கின்றன. தொடக்கத்திலேயே ஒருவித பதற்றத்துடன் இருக்கிறார் பிரியா பவானி ஷங்கர். தொடர்ந்து சில ஜாலியான காட்சிகள் வந்து செல்ல மீண்டும், ஹாரர் ஜானருக்குள் காட்சிகள் களம் புகுகின்றன. ஜீவா - பிரியா பவானி ஷங்கர் செல்லும் புதிய அபார்ட்மென்ட்டில் நிகழும் சம்பவங்கள் தான் படமாக இருக்கும் என தெரிகிறது.
திகிலூட்டும் காட்சிகள் ஒருவித விறுவிறுப்பை கூட்டுகின்றன. மர்மமான சம்பவங்களும், அதையொட்டிய நிகழ்வுகளும், சுவாரஸ்மாகவே நகர்கின்றன. ட்ரெய்லர் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை.
கே.ஜி.பாலசுப்ரமணி இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள திரைப்படம் ‘பிளாக்’. பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் பிரியா பவானி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார். மேலும், விவேக் பிரசன்னா, யோக் ஜபீ, ஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.