கார்த்திக் சுப்பராஜ் - சூர்யா கூட்டணியின் ’ரெட்ரோ’ படம் எப்படி இருக்கிறது?

சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெட்ரோ’. இந்தப் படத்தின் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், பிரகாஷ்ராஜ், ஜெயராம், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
ஸ்டோன்பெஞ்ச் மற்றும் 2டி நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரித்துள்ளன. இந்நிலையில் இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சூர்யாவுக்கு நீண்ட நாட்களாக ஒரு கம்பேக் தேவைப்படும் நிலையில் இந்தப் படம் அதை கொடுத்துள்ளதா என்பது குறித்த ரசிகர்களின் கருத்தை பார்ப்போம்.
ரெட்ரோ படத்தின் முதல் 30 நிமிடங்கள் அட்டகாசமாக இருப்பதாகவும், கனிமா பாடல் காட்சி ரசிக்கும்படி இருப்பதாகவும் நெட்டிசன் ஒருவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
#Retro - Liked it! ⭐️⭐️⭐️⭐️, kudos @karthiksubbaraj for once again voicing out the enslaved voiceless ethnicities that were ruled by dictators across the globe. How brilliantly he conveyed this noble theme in a love action drama genre is impeccable. After Jigarthanda XX , this… pic.twitter.com/VfIloZDBus
— Rajasekar (@sekartweets) May 1, 2025
முதல் பாதி சிறப்பாக இருப்பதாகவும், ஆக்ஷன் சம்பவங்களுடன் கூடிய இரண்டாம் பாதியில் கார்த்திக் சுப்பராஜின் முந்தைய படங்களை சில காட்சிகள் நினைவூட்டுவதாகவும் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
#Retro Interval
— தோழர் ஆதி (@RjAadhi2point0) May 1, 2025
கொடுத்த 200 ரூவா எல்லாம் Kanimaa 20 min Sequence கே கழிஞ்சு போச்சு..
Love Chapter 40 mins க்கு இன்னொரு 400 கொடுத்துடலாம்.. Interval Block க்கு ஒரு 200.. SaNa Music, Shreyas Camera, Editing னு Craftsmanship க்கு ஒரு 200..
First Half ஏ 1000 ரூவாய்க்கு Worth-u 🔥 pic.twitter.com/jmpyt5hJZt
இந்தப் படத்தின் முதல் பாதி 1000 ரூபாய்க்கு தகுதியானது என வெகுவாக பாராட்டியிருக்கிறார் நெட்டிசன் ஒருவர். பலரும் கனிமா பாட்டின் காட்சியமைப்பு புகழ்ந்து வருகின்றனர்.
#RETRO Second Half Review 🍿
— Laxmi Kanth (@iammoviebuff007) May 1, 2025
- After the Superb First Half, The Film Packed with More Action & Sentiments in Second Half..✌️
- #Suriya's Screen Presence was Semma Mass & Looked So Good On Screen after a While..⭐
- SaNa's BGM & The ONE Song Placement was..🔥
- Action Scenes… pic.twitter.com/20VG6pTo6I
ரெட்ரோ படத்தின் மிக முக்கியமான கருத்தை எடுத்து பேசியிருக்கும் கார்த்திக் சுப்பராஜுக்கு வாழ்த்துகள் என ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
#Retro First Half - Good & Engaging so far👌
— AmuthaBharathi (@CinemaWithAB) May 1, 2025
- Excellent first 30 mins screenplay just peaked at Kanimaa single shot scene💥
- The interval portion was Pure Bliss + Fireyy📈
- #Suriya & #PoojaHegde pair just stole the screen🫶
- KannadiPoove song worked well on screen🎶
- Well… pic.twitter.com/ZJll5FF0VO
இப்படியாக பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், சிலர் படத்தின் இரண்டாம் பாதி மட்டும் கொஞ்சம் நீட்டியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.