பிரபு தேவாவின் ‘பேட்ட ராப்’ ட்ரெய்லர் எப்படி?

Prabhu deva
பிரபு தேவா நடித்துள்ள ‘பேட்ட ராப்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பெரும்பாலான ட்ரெய்லர்களிலும் வருவது போல யானை, சிங்கம், புலியின் பெயர்கள் இந்த ட்ரெய்லரிலும் இடம்பெற்றுள்ளது. “காட்டுல யானை இருக்கும், சிங்கமும் இருக்கும். ஆனா புலி வரும்போது காடே சைலண்ட் ஆகிடும்” என்ற வசனத்துடன் தொடங்குகிறது ட்ரெய்லர்.
20 ஆண்டுகளாக சினிமாவில் நாயகனாக போராடுகிறார் பிரபு தேவா. ஆனால் நிராகரிப்பை மட்டுமே எதிர்கொள்கிறார். அவர் எதிர்கொள்ளும் சவால்களும், போராட்டமும் தான் படம் என்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. நடுநடுவே தேவையான அளவு ஆக்ஷன் காட்சிகளும், சென்டிமென்ட் காட்சிகளும் வந்து செல்கின்றன. மற்றபடி வழக்கமான வெகுஜன சினிமாவுக்கான அம்சங்கள் இருக்கும் ட்ரெய்லரில் புதிதாக எதுவும் தென்படவில்லை. 

எஸ்.ஜே.சீனு இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படம், ‘பேட்ட ராப்’. இதில் வேதிகா நாயகியாக நடித்துள்ளனர். ரியாஸ்கான், மைம் கோபி, பகவதி பெருமாள், ரமேஷ் திலக் உட்பட பலர் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ளார். ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ப்ளு ஹில் பிலிம்ஸ் சார்பில் ஜோபி பி சாம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சன்னிலியோன் ஒரு பாடலுக்கு பிரபுதேவாவுடன் நடனமாடியுள்ளார். இந்தப் படம் செப்.27-ல் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

Share this story