‘LIC’ படத்தில் நடிக்க பிரதீப் ரங்கநாதனுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?
1703152360094
இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் தான் அடுத்து நடிக்க உள்ள படத்திற்கு எவ்வளவு தொகையை சம்பளமாக பேசியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்ஜே சூர்யா ஆகியோர் இணைந்துள்ளனர். படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். படத்தின் பெயர் ‘LIC’ அதாவது Love Insurance Corporation என பெயரிட்டுள்ளனர். தொடர்ந்து படம் குறித்த தகவல்கள் வெளியாகும் நிலையில் தற்போதைய தகவலாக படத்தில் நடிக்க நடிகர் பிரதீப் ரங்கநாதன் ரூ. 15 கோடி சம்பளமாக கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.