இயக்குநர் அவதாரம் எடுக்கும் ஹ்ரித்திக் ரோஷன்...!

hrithik

ஹ்ரித்திக் ரோஷனின் புகழ்பெற்ற சூப்பர் ஹீரோ திரைப்படமான க்ரிஷ் திரைப்பட வரிசையில் நான்காம் பாகமான க்ரிஷ் 4 திரைப்படத்தை அவரே இயக்கி நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


2006 ஆம் ஆண்டு நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் அவரது தந்தையான ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் க்ரிஷ் திரைப்படம் வெளியானது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே மாபெரும் வெற்றிப்பெற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இப்படத்தை ரசித்தனர். ஹாலிவுட் திரைப்படங்களில் பல சூப்பர் ஹீரோக்கள் படங்களுக்கு அதற்கென ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.இந்திய சூப்பர் ஹீரோ திரைப்படமாக கிருஷ் அமைந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களான க்ரிஷ் 2, க்ரிஷ் 3 வெளியாகி வெற்றி திரைப்படங்களாக அமைந்தது. krish

இந்நிலையில் க்ரிஷ் 3 வெளியாகி 10 வருடங்கள் கடந்த நிலையில் ரசிகர்கள் கிருஷ் 4 பாகம் எப்போது உருவாகும் என கேள்விகள் எழுப்பிய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் க்ரிஷ் 4 பாகத்தை ஹ்ரித்திக் ரோஷன் நடித்து இயக்க திட்டமிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.


இப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுக்கவுள்ளார் ஹ்ரித்திக் ரோஷன். திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை பணிகள் முடிவடைந்துள்ளது எனவும். படப்பிடிப்பு பணிகள் அடுத்தாண்டு தொடங்கபடும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஆதித்யா சோப்ரா படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக செயல்படவுள்ளனர். இப்படம் இந்திய சினிமாவை உலக தரத்திற்கு எடுத்துச் செல்லும் திரைப்படமாக இருக்கும் என
எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

Share this story