நூறாவது படத்தை நோக்கி நாகார்ஜுனா -படத்தின் டைரக்டர் யார் தெரியுமா ?

நாகார்ஜுனா கடந்த 1986-ல் "விக்ரம்" படத்தின் மூலம் அறிமுகமானார். ஆரம்பத்தில் விமர்சனங்களை சந்தித்தாலும், பின்னர் தனது முத்திரையைப் பதித்து தெலுங்கு திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டார் .இப்போது அவர் நடித்த குபேரா திரைப்படம் தியேட்டரில் வெற்றி நடை போடுகிறது
இந்த படம் பற்றி ஒரு தெலுங்கு ரசிகர் கூறுகையில் "படத்தின் கதை முற்றிலும் புதிதாக உள்ளது. சேகர் கம்முலா மீண்டும் பிரமாதப்படுத்தி விட்டார். தனுஷ் மற்றும் நாகர்ஜுனா கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ராஷ்மிகா மந்தனா தனது கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி உள்ளார். நாகர்ஜூனாவின் எமோஷனலான கதாபாத்திரம் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியுள்ளது. " என ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார்
தென்னிந்திய சினிமாவில் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, கமல்ஹாசன், மோகன்லால், மம்முட்டி போன்ற ஜாம்பவான்கள் மட்டுமே 100 படங்கள் நடித்துள்ளனர்
நாகார்ஜுனாவின் 100-வது படத்தை தமிழ் இயக்குனர் ரா.கார்த்தி இயக்க இருக்கிறார். இந்நிலையில், தனது 100-வது படம் குறித்து நாகார்ஜுனா மனம் திறந்து பேசி இருக்கிறார் .
"எனது 100-வது படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. சரியான நேரத்தில் விவரங்களை அறிவிப்போம்," என்று நாகார்ஜுனா தெரிவித்தார்.இந்தப் படம் குறித்த அறிவிப்பு நாகார்ஜுனாவின் பிறந்தநாளான ஆகஸ்ட் 29 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிரது..