‘கமல்’ படத்தை கிடப்பில் போட்ட ‘எச்.வினோத்’- அதிரடியாக தயாராகும் மாஸ் படத்தின் இரண்டாம் பாகம்!

photo

கமல் ஹாசனின் படம் தாமதமாவதால் அடுத்த படத்தை இயக்க தயாராகியுள்ளார் எச். வினோத்.

photo

கமல் ஹாசனின் 233வது படத்தை எச்.வினோத் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து சங்கரின் ‘இந்தியன்2’ படத்தை முடித்துவிட்டு கமல் எச். வினோத் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில், கமலின் 234வது படத்தை மணிரத்னம் இயக்கபோவதாக அறிவித்து அந்த படத்திற்கு ‘தக்லைப்’ என பெயரிட்டனர். இந்தியன் படத்தை முடித்த கையோடு மணிரத்னத்துடன், கமல் இனைவதால் எச். வினோத்தின் பட பணிகள் தாமதமாகிறது. இதனால் இது வேலைக்கு ஆவாது என யோசித்த இயக்குநர் எச். வினோத். தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தயாராகி வருகிறாராம்.

photo

கார்த்தி சமீபத்தில் நடித்து வெளியான ‘ஜப்பான்’ எதிர்பார்த்த வெற்றியை தராததால், அவரும் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டயத்தில் உள்ளார். அதனால் அவரும் படத்திற்கு ஓகே சொல்லிவிட்டாராம். விரைவில் படம் குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.

Share this story