பாக்ஸ் ஆபிஸ் கேம்மால் தயாரிப்பாளர்களும் தவறான தகவலை பரப்புகிறார்கள் - உண்மையை வெளிச்சம் போட்டுகாட்டிய எச்.வினோத்.

photo

கடந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த  அஜித், விஜய் படங்கள் ரசிகர்களை  வெகுவாக கவர்ந்து, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.  இரண்டு படங்களும் வாசூல் வேட்டை நடத்திவரும் நிலையில் சமூக வலைதளத்தில் இரண்டு ஹீரோக்களின் ரசிகர்களும் யாருடைய படத்தின் வசூல் அதிகம் என அடித்துக்கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் அஜித்தின் ‘துணிவு’ படத்தின் இயக்குநரான எச்.வினோத் உண்மை நிலவரம் என்ன என்பதை போட்டுடைத்துள்ளார்.

photo

சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய எச்.வினோத் படத்தின் வசூல் விவரம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: “ பொதுவாக வசூல் ரீதியான விவாதம் அதிகமாக  நடைபெறுவதால், படத்தில் வசூலை தவறாக சொல்லும் இடத்திற்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்என கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இது தொடர்பான மீன்ஸ்களும் அதிகமாக சமூகவலைதளத்தில் உலாவருவதையும் பார்க்கமுடிகிறது.

photo
 


 

Share this story