‘லியோ’-ல் நான் இல்லை - விஜய் சேதுபதி அதிரடி !

leo

 லிஜய்யின் ‘லியோ’ படத்தில் நான் நடிக்கவில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். 

 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. மிரட்டலான கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

leo

இதற்கிடையே கடந்த இரண்டு மாத்திற்கு முன்னர் ‘லியோ’ படத்திற்கு திரைக்கதை எழுதிய இயக்குனர் ரத்னகுமார் தனது ட்விட்டர் பதிவில், ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதி அணிந்திருந்த கண்ணாடியை பகிர்ந்திருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் லியோ படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக கருத்துக்களை பகிர்ந்தனர். இதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்தது. 

leo

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்கள் எழுதிய கேள்விக்கு பதிலளித்த நடிகர் விஜய் சேதுபதி, இந்த தகவலை மறுத்துள்ளார். ‘லியோ’ படத்தில் நாள் நடிக்கவில்லை. தயவு செய்து இது குறித்து வதந்திகளை பரப்பவேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார். விஜய் சேதுபதியின் இந்த பதிவில் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  

மேலும் பேசிய அவர் எதற்காக இயக்குனர் ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த கண்ணாடியை பதிவு செய்தார் என்று எனக்கு தெரியாது. லியோ படத்தில் நான் நடிப்பதாக ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். என்னால் தனித்தனியாக பதில் சொல்ல முடியாது. அதனால் இந்த விளக்கத்தை அளிக்கிறேன் என்று கூறியுள்ளார். 


 

Share this story