சித்தார்த்தை நினைத்து பெருமைப்படுகிறேன் - நடிகர் சிம்பு

சித்தார்த்தை நினைத்து பெருமைப்படுகிறேன் - நடிகர் சிம்பு

சித்தா கதையை தேர்வு செய்ததற்காக, சித்தார்த்தை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று நடிகர் சிம்பு புகழாரம் சூட்டியுள்ளார்.
சித்தார்த்தை நினைத்து பெருமைப்படுகிறேன் - நடிகர் சிம்பு

நடிகர் சித்தார்த் நடித்து தயாரித்துள்ள படம் ‘சித்தா’ இந்த படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்கலை இயக்கிய சு. அருண்குமார் இயக்கியுள்ளார்.  இந்த படத்தில் நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வருகிறது. கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி வெளியான இந்த படம் நான்கு நாட்களில்  11 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது.

இந்நிலையில், சித்தா படக்குழுவினரை நடிகர் சிம்பு பாராட்டி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் சித்தா படம் அமைந்துள்ளது. பார்வையாளர்களுக்கு எளிதில் புரியும் வகையில் கதை உருவாகியுள்ளது என்றும், இந்த கதையை தேர்வு செய்ததற்கு சித்தார்த்தை நினைத்து பெருமைப் படுகிறேன் என்றும் சிம்பு பதிவிட்டுள்ளார். 

Share this story