"எனது தந்தையுடன் இணைந்து நடிக்க தயாராக இருக்கிறேன்"-மம்மூட்டி மகன் பேட்டி

thulkar

தெலுங்கில் பவன் சதினேனி இயக்கத்தில் துல்கர் சல்மான், சாத்விகா வீரவல்லி, கவுதம் வாசுதேவ் மேனன், ஸ்ருதிஹாசன் நடித்துள்ள படம், ‘ஆகாசம்லோ ஒக தாரா’. தமிழில் இது ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ . . ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். சென்னையில் நடந்த இப்படத்தின் நிகழ்ச்சியில் பேசிய துல்கர் சல்மான், ‘நான் ‘லக்கி பாஸ்கர்’ என்ற படத்தில் நடிப்பதற்கு முன்பே இக்கதையை கேட்டேன். மற்ற படங்களில் நான் ஒப்பந்தமானதால், இதில் என்னால் நடிக்க முடியாமல் போய்விடுமோ அல்லது இப்படத்தில் இருந்து நீக்கப்பட்டுவிடுவேனோ என்று பயந்தேன். நல்லவேளை, இதில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தது.
. எனது தந்தையுடன் இணைந்து நடிக்க தயாராக இருக்கிறேன். அவர்தான் என்னுடன் இணைந்து நடிக்க தயங்குகிறார்’ என்றார். ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ படத்தில், விண்வெளிக்கு செல்ல முயற்சிக்கும் ஏழை பெண்ணாக சாத்விகா வீரவல்லி, அவருக்கு உதவும் கார் டிரைவராக துல்கர் சல்மான் நடித்துள்ளனர்.

Share this story