என்னை வெறுத்தவர்களுக்கும் நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன் - நடிகை அனுபமா..!

நிவின் பாலியின் சூப்பர் ஹிட் திரைப்படமான பிரேமம் படத்தில் நடித்து திரைத்துறைக்கு ப்ரீட்சையமான அனுபமா தமிழ், தெலுங்கு திரைத்துறைகளில் பிரபலமானாலும் மலையாளத்தில் அவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது அவர் சுரேஷ் கோபியின் நடிப்பில் வெளியாக இருக்கும் ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா (ஜே.எஸ்.கே) படத்தில் நடித்து மீண்டும் மலையாளத்தில் ரீ என் ட்ரி கொடுக்க இருக்கிறார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் (ஜூன் 16) கொச்சியில் நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அனுபமா பரமேஸ்வரன், ‘ என்னால் நடிக்க முடியாது என்று நிறைய பேர் என்னை ட்ரோல் செய்தனர். அதையெல்லாம் மீறி இந்த படத்தின் இயக்குநர் (பிரவீன் நாராயணன்) என்னை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். இந்த படத்திற்கு இதயமாக ஜானகி கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. அவளை என்னிடம் ஒப்படைத்ததற்கு நன்றி.’ என்று பேசினார்.
கடந்த ஆண்டு டிராகன் மற்றும் தில்லு ஸ்கொயர் போன்ற வெற்றிப் படங்களில் நடித்த அனுபமா, “மலையாளத்தில் என்னை உற்சாகப்படுத்தும் படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று நான் முடிவு செய்த நேரத்தில் இந்தப்படத்தை செய்தேன்’ என்று கூறினார்.
.
மேலும் பேசிய அவர், ‘கோவிட் காலத்தின் போது எனது தொழில் மற்றும் வாழ்க்கையில் நான் ஒரு பெரிய மாற்றத்தை உணர்ந்தேன். இந்தப் படம் ஒரு வலுவான பெண் கதாபாத்திரத்தைச் சுற்றி வருகிறது. பிரவீன் என்னை நம்பியதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அதுவே ஒரு சாதனையாக உணர்கிறேன். என்னை ஆதரித்தவர்களுக்கும், என்னை வெறுத்தவர்களுக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்’ என்று பேசினார்.
சுரேஷ் கோபி பற்றி பேசிய அவர், ‘நான் தென்காசிப்பட்டினம், சம்மர் இன் பெத்லஹாம், சிந்தாமணி கொல கேஸ் பார்த்து வளர்ந்தவன். இந்த படத்தில் அவருடன் நடிப்பது என் வாழ்க்கையில் மிகவும் உற்சாகமான மற்றும் சவாலான தருணங்களை கொடுத்திருக்கிறது என்று கூறினார்.