வாழ முடியவில்லை, வந்துவிடு மகளே.... விஜய் ஆண்டனி மனைவி உருக்கம்...

வாழ முடியவில்லை, வந்துவிடு மகளே.... விஜய் ஆண்டனி மனைவி உருக்கம்...

இசை அமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர், எடிட்டர் என திரைத்துறையில் பன்முகம் கொண்டவர் விஜய் ஆண்டனி. அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் மீரா சில நாட்களுக்கு முன்பு மன அழுத்தம் காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த அதிர்ச்சியில் இருந்து விஜய் ஆண்டனி குடும்பம் மீளமுடியாமல் தவித்து வருகிறது. இதனிடையே, அண்மையில் நடந்த 'ரத்தம்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்குகூட தனது இளைய மகள் லாராவுடன் வந்திருந்தார். இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் மனைவியும், தயாரிப்பாளருமான பாத்திமா விஜய் ஆண்டனி தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். 

வாழ முடியவில்லை, வந்துவிடு மகளே.... விஜய் ஆண்டனி மனைவி உருக்கம்...

அதில் " எங்களுடன் நீ 16 ஆண்டுகள் மட்டுமே வாழ்வாய் என்று தெரிந்திருந்தால் உன்னை என் அருகில் மட்டும்தான் வைத்திருப்பேன். அந்த சூரியனையும், நிலவையும் கூட உனக்குக் காட்டியிருக்க மாட்டேன். நான் தினமும் உன் நினைவால் இறந்து கொண்டிருக்கிறேன். நீ இல்லாமல் என்னால் வாழ முடியவில்லை. அம்மா, அப்பாவிடம் திரும்பி வா. லாரா உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள். லவ் யூ தங்கம்" என பதிவிட்டிருக்கிறார். 
 

 

Share this story