புதிய இயக்குநர்களுடன் அதிக படம் செய்தேன் - ஜிவி பிரகாஷ்

புதிய இயக்குநர்களுடன் அதிக படம் செய்தேன் - ஜிவி பிரகாஷ் 

தற்போதைய தலைமுறையின் மிக முக்கிய இசையமைப்பாளராக இருந்து வருகிறார் ஜிவி பிரகாஷ் குமார். இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் மருமகனான ஜிவி தன்னுடைய சிறு வயது முதலே இசையோடு தன்னை இணைத்துக் கொண்டார். ஜென்டில் மென் படத்தில் சிக்கு புக்கு ரயிலே பாடலின் மூலம் தன்னுடைய சிறுவயதிலேயே பாடகராக அறிமுகமானார். பின்னர் சிறுவனாக இருக்கும் போதே சில பாடல்கள் பாடினார்.
2006-ம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஜி பிரகாஷ். முதல் ஆல்பத்திலே ரசிகர்களைத் தன் இசையின் மூலம் மயங்கினார் ஜிவி. இதற்கிடையில் டார்லிங் படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகி வெற்றியும் பெற்றார் ஜிவி. தெறி படத்தை அடுத்து ஜிவி தான் நடித்த படங்களுக்கே பெரும்பாலும் இசையமைத்து வந்தார்.

புதிய இயக்குநர்களுடன் அதிக படம் செய்தேன் - ஜிவி பிரகாஷ் 

இந்நிலையில்,  ஸ்டார் டா என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலியின் அறிமுக விழாவில் பங்கேற்று பேசிய இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தான் நடித்த 23 படங்களில் 17 படங்கள் புதிதாக முதல் முறையாக இயக்குநராக அறிமுகமானவர்கள் என்றார். 

Share this story