இப்படி ஆடுவார்ன்னு எதிர்பார்க்கல..!! மகன், மகளுடன் குத்தாட்டம் போட்ட ஏ.ஆர்.முருகதாஸ்..!!

A R Murugadoss

குடும்ப நிகழ்ச்சியில் மகன் மற்றும் மகளுடன் ‘கனிமா’ பாடலுக்கு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் உற்சாமாக நடனமாடும்  வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

தீனா, ரமணா, கஜினி, 7ம் அறிவு, கத்தி, சர்க்கார் என பல ஹிட் படங்களை கொடுத்தவர்  பிரபல திரைப்பட இயக்குநரான ஏ.ஆர். முருகதாஸ்.  கடைசியாக அவர் இயக்கிய சில படங்கள் கலைவான விமர்சனங்களை பெற்றன. ஆகையால் அவரது இயக்கத்தில் எந்தப்படமும் வெளியாகவில்லை.  தற்போது அவர்,  நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி படத்தை இயக்கிவருகிறார். கள்ளக்குறிச்சியை பூர்வீகமாக கொண்ட முருகதாஸ்,  ஊர் பாசத்தை தனது ஒவ்வொரு படத்திலும் காட்டியிருப்பார். 

Image

இந்நிலையில் முருகதாஸின் மகள் ஹர்ஷிதாவின் மஞ்சள் நீராட்டு விழா கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் முருகதாஸின் உறவினர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் திரளாகப் பங்கேற்றனர். அப்போது மகள் ஹர்ஷிதா மற்றும் மகன் ஆதித்யாவுடன் இணைந்து முருகதாஸ் மேடையில் உற்சாகமாக நடனமாடினார். சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தில் இடம்பெற்றுள்ள  ‘கனிமா’ பாடலுக்கு அவர் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

திறமையான இயக்குநர்,  திரைப்படக் காட்சிகளை நடித்துக் காட்டும் திறன் கொண்டவர்  முருகதாஸ் என அனைவரும் அறிந்திருந்தாலும், அவர்  இப்படி  அட்டகாசமாக நடனமாடுவார் என எதிர்ப்பார்த்திருக்கவில்லை. பிள்ளைகளுடன் முருகதாஸ் நடனமாடியதை பார்த்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரும் கைதட்டி உற்சாகமாக ஆரவாரம் செய்தனர். உறவினர்கள் மற்றும்  திரைத்துறை நண்பர்கள், குடும்பத்தினர் என அனைவரும் முருகதாஸின் நடனத்தை பார்த்து ஆச்சரியமடைந்து,  கைதட்டி  ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 


 

Share this story