தங்கலான் படத்தில் எனக்கு வசனமே இல்லை - நடிகர் விக்ரம்“

தங்கலான் படத்தில் எனக்கு வசனமே இல்லை - நடிகர் விக்ரம்“

பிதாமகன் திரைப்படத்தை போல தங்கலான் திரைப்படத்திலும் தனக்கு வசனமே இல்லை என்று நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார். 

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்  தயாரிப்பில் விக்ரம் ,மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி ஆகியோர் நடிப்பில் தயாராகியுள்ள படம் தங்கலான். கே.ஜி.எப்-ஐ மைய்யமாக வைத்து தயாராகியுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் லுக் போஸ்டர், டைட்டில் ஆகியவை வெளியாகி படத்தின் மீதான் எதிர்பார்பை அதிகரித்தது. அதற்கு காரணம் படத்தில் சியான் விக்ரமின் தோற்றம். இதுவரை நாம் பார்த்திராத வகையில் அடையாளம் தெரியாத விதமாக செம லுக்கில் உள்ளார் விக்ரம்.

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விக்ரம், தனக்கு வசனமே இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தங்கலான் திரைப்படம் வெளியாகிறது.
 

Share this story