இனி 5 வருடத்திற்கு இந்த மாதிரி படம் இல்லை.. லோகேஷ் கனகராஜ் பேட்டி..!

lokesh kanagaraj

இனி ஐந்து வருடங்களுக்கு கத்தி, துப்பாக்கி, ரத்தம் இல்லாமல் படம் இல்லை என்று லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் ஆன லோகேஷ் கனகராஜ் ’மாநகரம்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகி அதன் பின்னர் ’கைதி’ ’மாஸ்டர்’ ’விக்ரம்’ ’லியோ’ ஆகிய படங்களை இயக்கிய நிலையில் தற்போது ரஜினிகாந்த் நடித்த வரும் ’கூலி’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.


இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த லோகேஷ் கனகராஜ் இடம், ‘ரத்தம் வெட்டு குத்து இல்லாமல் ஒரு முழுக்க முழுக்க ரொமான்ஸ் படம் எப்போது எடுப்பீர்களா? என்று செய்தியாளர் கேட்ட நிலையில் கேள்விக்கு பதிலளித்த லோகேஷ், ‘இனி ஐந்து வருடங்களுக்கு இல்லை’ என்று கூறியுள்ளார். ஏற்கனவே அது மாதிரி படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கி விட்டேன் என்றும் எனவே ஐந்து வருடம் கழித்து தான் ரொமான்ஸ் படம் என்றும் கூறினார்.



மேலும் ரோலக்ஸ் என்ற கேரக்டரை டெவலப் பண்ணி தனியாக அது குறித்து ஒரு படம் எடுப்பேன் என்றும் அந்த படத்தில் என்னுடைய மற்ற படங்களின் கேரக்டர்கள் இடம் பெறுவார்கள் என்றும் அது ஒரு முழுமையான எல்சியு படமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share this story