“ தனக்கு தாயாக வேண்டும் என்ற கனவு இருக்கிறது” - சமந்தா

samantha

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா, மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டதால் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இவரது நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வந்த சிட்டாடெல் வெப் தொடர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இதில் ரகசிய ஏஜெண்டாக ஒரு குழந்தைக்கு தாயாக நடித்திருந்தார். 

இந்த நிலையில் நிஜ வாழ்க்கையில் தாயாக மாறுவது தனது கனவு எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக பிரபல ஆங்கில ஊடகத்திடம் பேசிய அவர், “இப்போதும் கூட தாயாகுவதற்கு தாமதமாகவில்லை. எனக்கும் தாயாக வேண்டும் என்ற கனவு இருக்கிறது. நிச்சயம் அப்படி ஆக விரும்புகிறேன். அது ஒரு அழகான அனுபவம். அதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன். மக்கள் பெரும்பாலும் வயதை பற்றி கவலைப் படுகிறார்கள். ஆனால் அப்படியெல்லாம் இல்லை. நீங்கள் தாயாக இருக்க முடியாத நேரம் வாழ்க்கையில் இல்லை என நினைக்கிறேன்” என்றார். sam chai

கடந்த 2017ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சமந்தா. பின்பு 2021 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிவதாக அறிவித்தார். அதன்படி தற்போது இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். 

Share this story