நான் மாதம் 6 இலக்கு எண்களில் சம்பாதிக்கிறேன் : விஜே பார்வதி!
யூடியூப் சேனல்களில் விஜேவாக பணியாற்றி போல்டான விஷயங்களை பேசி வைரலானவர் தான் விஜே பார்வதி. அதன் பின்னர், ஜீ தமிழில் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டார். பிசிக்கல் டாஸ்க்கை விட வாய் பேச்சு அதிகம் இருந்த நிலையில், சீக்கிரமே அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டனர். சில படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் நடித்த விஜே பார்வதி தற்போது இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சராகவும் ஏகபோகமாக சம்பாதித்து வருகிறார்.
அதிகமாக சம்பாதிக்கும் நபர்கள், அதைவிட அதிகமாக செலவு செய்வதிலேயே ஆர்வமாக உள்ளனர். ஒரு ரூபாய் சம்பாதிக்கிறவனுக்கு 2 ரூபாய் கடன் இருக்கும், ஒரு கோடி ரூபாய் சம்பாதிக்கிறவனுக்கு 2 கோடி ரூபாய் கடனிருக்கும் என குபேரா இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசியது போல, தான் அதிகமாக செலவு செய்யும் நபர் தான் என்றும் மாதத்துக்கு 65 ஆயிரம் வரை தனக்காகவே செலவு செய்துக் கொள்வேன் என்றும் விஜே பார்வதி கூறியதை கேட்டு, மாதம் 50 ஆயிரத்துக்கும் குறைவாக சம்பாதித்துக் கொண்டு குடும்பத்தை ஓட்டுபவர்கள் எல்லாம் ஷாக் ஆகியுள்ளனர்.
நான் ஒரு நடிகை என்பதால் படங்கள் மூலம் சம்பாதிக்கிறேன், இன்ஸ்டாகிராம் மூலமாகவும், யூடியூப் மூலமாகவும், இளைஞர்களை சுற்றுலா தளங்களுக்கு கொண்டு செல்வதன் மூலமாகவும் சில பிராண்டுகளை விளம்பரப்படுத்தியும் பல்வேறு வழிகளில் என்னுடைய மாத வருமானத்தை ஈட்டி வருகிறேன் எனக் கூறியுள்ளார்.
65 ஆயிரம் ரூபாய் மாதம் செலவு செய்வதாக சொல்லியிருக்கும் விஜே பார்வதி அதை விட 3 மடங்கு தான் சம்பாதிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், தனது சம்பளத்தை சரியாக சொல்லாமல், 6 இலக்கத்தில் சம்பாதிக்கிறேன் என தனது சம்பளத்தை ரசிகர்களையே கெஸ் செய்ய வைத்திருக்கிறார். சுமார் 2 லட்சம் ரூபாய் அளவுக்கு ஒவ்வொரு மாதமும் அவர் சம்பாதிப்பார் என கணித்து கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். எதற்கு இந்த வீடியோ என்றும் கலாய்த்தும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

