ஆடிஷனில் பாலியல் துன்புறுத்தலை அனுபவித்தேன்... நடிகை காவ்யா தாபர் புகார்

kaviya

தமிழில், மார்கெட் ராஜா எம்.பி.பி.எஸ், பிச்சைக்காரன் 2 படங்களில் நடித்தவர் காவ்யா தாபர். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவர், சினிமாவுக்கு வரும் முன் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டதாக புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காவ்யா தாபர் கூறும்போது, “சினிமாவுக்கு வரும் முன் விளம்பர படங்களில் நடித்து வந்தேன். அப்போது இயக்குநர் ஒருவர், ஆடிஷனுக்காக அவர் அலுவலகத்துக்கு அழைத்திருந்தார். சென்றேன். அவர் என்னிடம் பாலியல் சலுகையை எதிர்பார்த்தார். 4 வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் சொன்னார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். பிறகு அந்த வாய்ப்புகளை நிராகரித்துவிட்டு வந்துவிட்டேன். என்னை நடிகையாகப் பார்க்க வேண்டும் என்பது என் அப்பாவின் கனவு. அதனால்தான் சினிமாவுக்கு வந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

Share this story