ஆன்லைனில் ஆர்டர் செய்தேன்... என்னையும் ஏமாத்திட்டாங்க பா - புலம்பும் அனிதா சம்பத்..!

1

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தனியாக யூடியூப் சேனல் தொடங்கிய அனிதா சம்பத் அவரது வாழ்வில் நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் .

இந்நிலையில், அமேசான் ஷாப்பிங் தளத்தில் ஸ்டோரேஜ் பாக்ஸ் ஒன்றை ஆர்டர் அனிதாவுக்கு பேரதிர்ச்சியும் ஏமாற்றமும் பரிசாக கிடைத்துள்ளது . ஸ்டோரேஜ் பாக்ஸ் ஆர்டர் செய்த அவருக்கு அழுக்கான புடவை ஒன்று டெலிவரி ஆகியுள்ளது .

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார் .

ஆன்லைனில் ஆர்டர் செய்த பலருக்கு தாங்கள் ஆர்டர் செய்த பொருட்கள் வராமல் வேறு ஒரு பொருள் கிடைக்க தங்களது ஏமாற்றத்தை வேதனையுடன் தெரிவித்து வந்தாலும் இதுகுறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் இதுபோன்ற ஏமாற்று வேலைகள் தொடர்கதையாய் தொடர்ந்து வருவது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது என புலம்பி  தள்ளியுள்ளார் 

 

Share this story