"திரையில் உணர்வுகளை பதிக்கிறேன்”... நடிகர் சூரி நெகிழ்ச்சி...

soori

கதையின் நாயகனாக தொடர்ந்து பயணித்து வரும் சூரி தற்போது மாமன் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 


இந்த நிலையில் சூரி தனது எக்ஸ் பக்கத்தில் “சுவர்களில் நிறங்களை பதித்தேன் – இன்று திரையில் உணர்வுகளை பதிக்கிறேன்” எனக் குறிப்பிட்டு ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். மேலும் ஒரு அறையில் இருந்து கொண்டு ஜன்னல் வழியாக மற்றொரு கட்டிடத்துக்கு பெயிண்ட் அடிக்கும் நபரை வீடியோ எடுத்து பின்பு இவர் உட்காந்திருப்பதை காண்பிக்கும் வகையில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். மேலும் வீடியோ பின்னணியில் அஜித்தின் விடாமுயற்சி பட பாடல் ஒலிக்கிறது. இந்த வீடியோ அவர் பெயிண்டராக இருந்து தற்போது நடிகராக மாறியதை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. 

ஆரம்ப கால வாழ்க்கையில் தான் பெயிண்டராக இருந்ததை நினைவு கூர்ந்து சூரி பதிவிட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் பலரது கவனத்தை பெற்று வருகிறது. 

Share this story