ராயன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது... தனுஷை பாராட்டிய தினேஷ் கார்த்திக்
1724759715000
தனுஷ் இயக்கி, நடித்து சில வாரங்களுக்கு முன் வெளியான படம் ராயன். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ராயன், தனுஷின் 50 ஆவது படம் ஆகும். இந்த படம் வெளியானதில் இருந்து மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இதுவரை தனுஷ் நடித்து வெளியான படங்களை விட ராயன் அதிக வசூல் செய்துள்ளது. இந்த படம் வெளியான ஒரு வாரத்திலேயே 116 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்பட்டது.இதுவரை உலகளவில் 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு வெளியான தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற படங்களில் ராயன் முதல் இடத்தில் உள்ளது. ராயன் படம் ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ராயன் படத்தை பாராட்டி கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "ராயன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அருமை தனுஷ். நீங்கள் ஒரு சிறந்த நடிகர் என்பது எப்போதும் தெரியும், ஆனால் நீங்கள் ஒரு சிறந்த இயக்குநரும் கூட. இன்னும் நிறைய படங்கள் இயக்க வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
Ohhh I loved RAAYAN
— DK (@DineshKarthik) August 27, 2024
Well done @dhanushkraja . Always knew the great actor in you . But brilliant as a director too 👌🏽
More power and many more such movies