சிவகார்த்திகேயனின் அந்த விஷயத்தை தெரிந்துகொள்ள ஆசை.. கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்...
1727349958000

தமிழ் சினிமாவில் எந்தஒரு பின்னணியும் இல்லாமல் தனது திறமையால் முன்னேறி இப்போது பலருக்கு ஒரு உதாரணமாக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். கடைசியாக இவரது நடிப்பில் அயலான் படம் வெளியானது, மிகப்பெரிய வெற்றி பெற்றது. அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார், கமல்ஹாசன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.இப்படம் வரும் அக்டோபர் 31ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது, சாய் பல்லவி தான் நாயகி. கடைசியாக சிவகார்த்திகேயன் விஜய்யின் கோட் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அண்மையில் ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் சொன்ன விஷயம் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் அவர், சிவகார்த்திகேயனின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை நான் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது அவர் ஒரு நாள் 3 குழந்தைகளையும் எப்படி சமாளிக்கிறார்? எவ்வளவு கலகலவென இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள ஆசையாக இருக்கிறது என கூறியுள்ளார்.