12 வருஷம் உங்களுடன் வாழ்ந்த நான் ஒரு முட்டாள்... இமானை கடுமையாக சாடியுள்ள முன்னாள் மனைவி!
இசையமைப்பாளர் இமான் இரண்டாவது திருமணம் குறித்து அவரது முன்னாள் மனைவி அவரை கடுமையாக சாடியுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு தனது மனைவி மோனிக்கா ரிச்சர்டை பிரிந்ததாக இமான் தெரிவித்தார். திருமணமாகி 13 ஆண்டுகளுக்குப் பிறகு, தன் மனைவியைப் பிரிந்தார் இமான். கணினி பொறியாளர் மோனிக்கா என்பவரை இமான் 2008-ம் ஆனது திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் இமான் சமீபத்தில் அமலி உபால்டு என்பவரை மறுமணம் செய்துள்ளார். அமலியின் மகள் நேத்ராவை இனி தனது மூன்றாவது மகளாக ஏற்றுக்கொள்வதாகவும் தனது மகள்கள் வெரோனிகா மற்றும் பிளெசிகாவை மிகவும் மிஸ் செய்வதாகவும் தெரிவிததிருந்தார்.

இந்நிலையில் இமானின் முன்னாள் மனைவி மோனிக்கா ரிச்சர்டு அவரை கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்
"டியர் டி. இமான், இரண்டாவது திருமணத்திற்கு வாழ்த்துக்கள். 12 ஆண்டுகள் உங்களுடன் சேர்ந்து வாழ்ந்த ஒருவரை இவ்வளவு சீக்கிரம் மாற்றிவிட முடியும் என்றால் உங்களை போன்ற நபருடன் என் நேரத்தை வீணடித்த நான் ஒரு முட்டாள் என நினைக்கிறேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக உங்களின் சொந்த பிள்ளைகளையே நீங்கள் பார்க்கவும் இல்லை, கவனிக்கவும் இல்லை. ஆனால் அவர்களுக்கு பதிலும் ஒருவரை கண்டுபிடித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

உங்கள் அப்பாவிடம் இருந்து என் பிள்ளைகளை நான் பாதுகாப்பேன். தேவைப்பட்டால் அந்த புது குழந்தையையும் நான் பாதுகாப்பேன்.
திருமண வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

