"இதயம் முரளி" படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை ரிலீஸ்...!

ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் இதயம் முரளி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷின் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி, சிம்புவின் STR 49 ஆகிய பெரிய ஹீரோக்களின் படங்களை தயாரித்து வரும் நிறுவனம் டான் பிக்சர்ஸ். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஆகாஷ் பாஸ்கரன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இதயம் முரளி என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் அதர்வா ஹீரோவாக நடிக்கிறார்.
A piece of nostalgia is about to strike you 💘
— DawnPictures (@DawnPicturesOff) March 20, 2025
The first single from #IdhayamMurali - launching tomorrow
A @MusicThaman melody@Atharvaamurali @MusicThaman @AakashBaskaran @natty_nataraj @PreityMukundan @11Lohar @Dop_Sai @RakshanVJ @JustNiharikaNm @Actor__SUDHAKAR @AngelinB3… pic.twitter.com/Lu5slyi6zi
இதில் அதர்வாவுடன் இணைந்து ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோகர், நட்டி நட்ராஜ், ரக்ஷன், தமன், நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில், இதயம் முரளி படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.