`இடிமுழக்கம்' படத்தின் 2வது பாடல் ரிலீஸ்...!

idimulakam

சீனு ராமசாமியின் `இடிமுழக்கம்' படத்தின் 2வது பாடல் வெளியாகி உள்ளது. 

தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய சீனு ராமசாமி, அடுத்ததாக இயக்கி உள்ள படம் 'இடிமுழக்கம்'.ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக காயத்ரி சங்கர் நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், சுபிக்ஷா, சௌந்தரராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


இப்படம் 22-வது பூனே சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய சினிமா பிரிவில் திரையிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாடலான “கானா விளக்கு மயிலே' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ஆர்யா இருவரும் அவர்களது எக்ஸ் தளத்தில் வெளியிட்டனர்.சீனு ராமசாமி கடைசியாக இயக்கிய கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம் மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story