‘பெற்றோரை அவர்கள் வாழும்போதே கொண்டாடுங்கள்’-மெசேஜ் சொல்லும் இட்லி கடை

idly
தனுஷ் இயக்கிய இட்லி கடை படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது .இப்படத்தில் என்ன மெஸேஜை தனுஷ் சொல்லியிருக்கிறார் என்று விரிவாக நாம் இப்பதிவில் காணலாம் 
ஷாலினி பாண்டேவின் காதலுக்கு மரியாதை தந்து, அருண் விஜய்யின் எகத்தாளத்துக்கு அமைதி காப்பது, சத்யராஜின் நம்பிக்கைக்கு கவுரவம் சேர்ப்பது, சமுத்திரக்கனியிடம் நியாயத்தை கேட்பது, நித்யா மேனனிடம் கரிசனம் காட்டுவது என்று, அனைத்து ஏரியாவிலும் தனுஷின் ஆட்டம் கொடிகட்டி பறக்கிறது. இயக்குனராகவும் அவர் ஜெயித்திருக்கிறார். இட்லியின் மகிமையை சொல்லி இதயத்தை கரைக்கிறார், ராஜ்கிரண். கீதா கைலாசம் அமைதியாக வந்து கவனத்தை ஈர்க்கிறார். வில்லன் அருண் விஜய் தனுஷிடம் ேமாதி, கதையில் தனது இருப்பை அழுத்தமாக பதிவு செய்துள்ளார். இட்லி கடையை விற்றதாக நினைத்து நித்யா மேனன் குமுறுவது சிறப்பு. சத்யராஜ், ஷாலினி பாண்டே, போலீஸ் பார்த்திபன், சமுத்திரக்கனி, இளவரசு, ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோர் அனுபவ நடிப்பை வழங்கியுள்ளனர்.
கிரண் கவுசிக் ஒளிப்பதிவு, கிராமத்தை கண்முன் நிறுத்துகிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் தனுஷ் பாடிய ‘என்ன சுகம்’, ‘எஞ்சாமி’ பாடல்களும், பின்னணி இசையும் கூடுதல் பலம் சேர்த்துள்ளன. எடிட்டர் ஜி.கே.பிரசன்னா, ஆர்ட் டைரக்டர் ஜாக்கி ஆகியோரின் பணிகளும் குறிப்பிடத்தக்கது. . ‘பெற்றோரை அவர்கள் வாழும்போதே கொண்டாடுங்கள்’ என்ற மையக்கருத்து மனதில் நிறைகிறது.

Share this story