நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் தனுஷ் படம் -எந்த படம் தெரியுமா ?

Dhanush
நடிகர் தனுஷ் பல படங்களில் ஹீரோவாக நடித்தாலும் ,அவ்வப்போது சில படங்களை இயக்கி தான் ஒரு சிறந்த டைரக்டர் கூட என்பதை நிரூபித்து வருகிறார் .இவர் இயக்கிய இட்லி கடை படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .அதன் முக்கிய அப்டேட் பற்றி நாம் காணலாம் 
தனுஷ் இயக்கிய நடித்த "இட்லி கடை" படத்தின் ஓடிடி ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் தனுஷ் இயக்கத்தில் ‘இட்லி கடை’ படம்  திரையரங்குகளில் வெளியானது.இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் நித்யா மேனன் கதாநாயகியாகவும், அருண் விஜய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.டான் பிக்சர் தயாரித்துள்ள இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படம் வெளியான  நாள் முதல்  நல்ல வசூல் குவித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வரும் "இட்லி கடை" படத்தின் ஓடிடி ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டுள்ளனர். இந்நிலையில், "இட்லி கடை" படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற 29ந் தேதி வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share this story