தனுஷுக்கு திருப்புமுனையாகும் இட்லி கடை -எப்போது ரிலீஸ் தெரியுமா ?
நடிகர் தனுஷ் நடிகராக இருந்தாலும் அவ்வப்போது படங்களை இயக்கியும் வருகிறார் .அவர் பவர் பாண்டி முதல் ராயன் வரை பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார் .இந்நிலையில் அவர் இயக்கத்தில் இட்லி கடை படம் பெரும் பொருட்செலவில் உருவாகி வருகிறது .இப்படத்தின் அப்டேட் பற்றி நாம் காணலாம்
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது. தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
எம்மாதிரியான கதைக்களத்துடன் இப்படம் இருக்கும் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி வெளியாக இருக்கிறது.அதற்காக படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 14-ம் தேதி சென்னை நேரு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படக்குழு பரபரப்பாகி உள்ளது

