மீண்டும் தொடங்கிய 'இட்லி கடை'... பாங்காக் பறந்த படக்குழு...!

idly kadai

 'இட்லி கடை' படக்குழுவினர் படப்பிடிப்பிற்காக பாங்காக் சென்றுள்ளனர். 

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்திற்கு பின் நடிகர் தனுஷ் இயக்கி வரும் படம் 'இட்லி கடை'. இதில் அவரே நாயகனாகவும் நடிக்கிறார். நாயகியாக நித்யா மேனனும், முக்கிய வேடத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், ஷாலினி பாண்டே ஆகியோரும் நடிக்கின்றனர். 'டான் பிக்சர்ஸ், வுண்டர்பார் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார்.


இதன் படப்பிடிப்பு 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. தற்போது மீதமுள்ள காட்சிகளை படமாக்க படக்குழுவினர் பாங்காக் செல்கின்றனர். பார்த்திபன், சத்யராஜ், அருண் விஜய் ஆகியோர் பாங்காக் செல்லும் போட்டோ வெளியாகி உள்ளது. இதையடுத்து நாளை தனுஷ், ஷாலினி பாண்டே மற்றும் குழுவினர் செல்ல உள்ளனர். வசன காட்சிகளுடன் பாடல் காட்சி ஒன்றும் அங்கு படமாக உள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி அன்று ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Share this story