சுட சுட இட்லி கடை அப்டேட்..! ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு...!

idly kadai

தனுஷ் இயக்கி வரும் ’இட்லி கடை’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. டான் பிக்சர்ஸ் (Dawn pictures) சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் தனுஷ் இயக்கி வரும் திரைப்படம் 'இட்லி கடை'. ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இத்திரைப்படத்தில் தனுஷுடன் அருண் விஜய், நித்யா மேனன், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேனி மாவட்ட பின்னணியில் நடைபெறும் கதையாக இட்லி கடை திரைப்படம் உருவாகி வருகிறது. தனுஷ் இயக்கி, நடித்து சமீபத்தில் வெளியான இவரது 50வது படமான ’ராயன்’ பாக்ஸ் ஆபிலிஸ் நல்ல வரவேற்பை பெற்று சாதனை படைத்தது. இதனைத்தொடர்ந்து தனது 52வது படமாக இட்லி கடை படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இதனிடையே ’நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தையும் இயக்கி முடித்துள்ளார். இத்திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என தெரிகிறது.



நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்திலிருந்து வெளியான ’Golden sparrow’ பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. இது மட்டுமின்றி தெலுங்கில் 'குபேரா' என்ற படத்தில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோருடன் நடித்து வருகிறார். இந்நிலையில் தனுஷ் ஒரே சமயத்தில் நடிகராகவும், இயக்குநராகவும் கலக்கி வருவது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Share this story