மக்கள் பிரச்சினையைப் பேசினா அது நல்ல படம் -இயக்குநர் பேரரசு
1702640564023
மதங்கள் தாண்டிய மனிதநேயத்தை வலியுறுத்தும் விதமாக பாய் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் நாயகனாக ஆதவா ஈஸ்வரா நடித்திருக்கிறார். நாயகியா நிகிஷா, வில்லனாக தீரஜ் கெர் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பேரரசு, இந்த தலைப்பைத் தணிக்கைக்கு ஏற்று பிறகு தணிக்கை சான்றிதழ் கிடைத்திருக்கிறது என்றால் கண்டிப்பாக இந்தப் படம் சமூக நல்லிணக்கம் பேசும் படமாகத் தான் இருக்கும். மக்கள் இன்று அனைத்து பிரச்சனைகளையும் வெறும் செய்தியாக கடந்து போகின்றனர். அதற்கு தீர்வு என பார்ப்பதில்லை. இது பற்றி ஆட்சியாளர்களும் யோசிப்பதில்லை என தெரிவித்துள்ளார்.