தலைவர் என்றால் ரஜினி தான் - அமிதாப் பச்சன்

தலைவர் என்றால் ரஜினி தான் - அமிதாப் பச்சன் 

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து 170-வது படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. ஞானவேல் இயக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு சில நாட்களில் தொடங்கி நெல்லை, குமரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. படத்தில் மூன்று கதாநாயகிகள் ஒப்பந்தமாகி இருக்கின்றனர். துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் ஆகியோர் படத்தில் நடிக்கின்றனர். இது தவிர, ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில் மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி இருக்கிறது. இதற்காக ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் மும்பை சென்றுள்ளனர். அங்கு ரஜினி மற்றும் அமிதாப் பச்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. 

தலைவர் என்றால் ரஜினி தான் - அமிதாப் பச்சன் 

இதனிடையே,33 ஆண்டுகள் குறித்து அமிதாப்பச்சனுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் ரஜினி டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள அமிதாப் பச்சன், தலைவர் என்றால் அது நீங்கள் மட்டும்தான். உங்களுடன் என்னை ஒப்பிட முடியாது என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார்

Share this story