வீட்ல கற்பூரம் கொளுத்தலன்னா நம்ம எல்லாம் தீவிரவாதிங்கதான் - பா.ரஞ்சித்

வீட்ல கற்பூரம் கொளுத்தலன்னா நம்ம எல்லாம் தீவிரவாதிங்கதான் - பா.ரஞ்சித் 

இயக்குனர் பா ரஞ்சித் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உயர்ந்துள்ளார். பெரும்பாலும் பொழுதுபோக்கிற்காகவே படங்களை எடுத்து வந்த இயக்குனர்கள் மத்தியில் கருத்தியல் சார்ந்த படங்களை எடுத்து தனது சித்தாந்தங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் ரஞ்சித். தன் படங்கள் வாயிலாக அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை உலகிற்கு காண்பித்தவர். இயக்கம் மட்டுமல்லாமல் தயாரிப்பிலும் தன்னை ஒத்த கருத்துக்கள் கொண்ட இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார். பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிக்குண்டு ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் பெற்ற வரவேற்பு அனைவருக்கும் தெரியும். தற்போது அவரது தயாரிப்பில் ப்ளூ ஸ்டார் உருவாகி இருக்கிறது. 

வீட்ல கற்பூரம் கொளுத்தலன்னா நம்ம எல்லாம் தீவிரவாதிங்கதான் - பா.ரஞ்சித் 

இப்படத்தின் நிகழ்ச்சியில் பேசிய அவர், இன்று முக்கியமான நாள். இன்றைய நாளில் வீட்டில் கற்பூரம் ஏற்றவில்லை என்றால், அனைவரையும் தீவிரவாதிகள் என்று கூறிவிடுவார்கள் என தெரிவித்துள்ளார். 

Share this story