உண்மையான வாழ்க்கையை வாழ வேண்டுமெனில் பறந்து போ படத்தை போய் பாருங்கள் - நயன்தாரா!
1752024608000
நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டா பக்கத்தில் இந்தப் படம் குறித்து கூறியுள்ளதாவது:-
குழப்பமற்ற இந்த உலகத்தில், உங்களுக்கு உண்மையான வாழ்க்கையை வாழ வேண்டுமெனில் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு மலைக்குச் செல்லுங்கள். அவர்களுடன் நீங்களும் மலை ஏறுங்கள். அல்லது குளத்தில் நனையும்வரை விளையாடுங்கள்.
இல்லையெனில் ராம் சார் இயக்கியுள்ள பறந்து போ படத்துக்குக் கூட்டிச் செல்லுங்கள். நாம் ஏற்கெனவே என்னவெல்லாம் இழந்துக்கொண்டிருக்கிறோம் என்பது புரியும். என்ன முக்கியம் என்பதை அழகாக நினைவுப்படுத்தியுள்ளார். நான் பார்த்ததிலேயே மிகவும் அழகான திரைப்படம் இதுதான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

