ஆஸ்கர் விருதுக்கு செல்லும் தமிழ் இசையமைப்பாளர் இசையமைத்த படம் -யார் படம் தெரியுமா ?

ilaiyaraja-22

அறிமுக இயக்குனர் சந்தோஷ் தவகர் இயக்கத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 14ம் தேதி வெளியான மராத்தி படம் ‘கோந்தல்’. இளையராஜா இசை அமைத்த இப்படத்தில் பிவாபா என்ற ரோலில் கிஷோர் கடம், சுமன் என்ற கேரக்டரில் இஷிதா தேஷ்முக் நடித்தனர். மேலும், யோகேஷ் சொஹோனி, சுரேஷ் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ‘கோந்தல்’ என்ற பாரம்பரிய வழிபாட்டு நடன கலையின் பின்னணியில் உருவான இப்படம் 2027ம் ஆண்டின் ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது.  வசதியான ஒருவரை திருமணம் செய்து கொண்டு, அந்த திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாமல் தவிக்கும் இளம் மணப்பெண்ணை சுற்றி இந்த கதை நகர்கிறது. இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை வென்றது.
குறிப்பாக, 56வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான ‘வெள்ளி மயில்’ விருதை வென்றது.

Share this story