இசைஞானி இளையராஜா குடும்பத்திலிருந்து மேலும் ஒரு மியூசிக் டைரக்டர்

இசைஞானி இளையராஜா பல்லாயிரம் பாடல்களுக்கு இசையமைத்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார் .அவரை பின் தொடர்ந்து அவரின் மகன் யுவன் சங்கர் ராஜா ,கார்த்திக் ராஜா ஆகியோரும் ம்யூசிக் டைரக்டராக பல படங்களுக்கு இசையமைத்தார்கள் .அது மட்டுமல்லாமல் அவரின் மகளும் பாடகியானார் ,மேலும் அவரின் சகோதரர் கங்கை அமரன் அவரின் மகன்கள் பிரேம்ஜி ,வெங்கட் பிரபு ஆகியோரும் இசையில் சாதித்தனர் .இந்நிலையில் இளையராஜாவின் பேரனும் ,கார்த்திக் ராஜாவின் மகனுமான யத்திஸ்வரர் ராஜா பக்தி பாடலொன்றை இசையமைத்து ம்யூசிக் டைரெக்டராக மாறினார்
இளையராஜா அடிக்கடி செல்லும் திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத்தில், ஆசிரம நிர்வாகிகள் முன்னிலையில் இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது. யத்தீஸ்வரர் ராஜாவுக்கு சிறு வயது முதலே இசை மீது ஆர்வம் இருந்தது. விஸ்காம் படிப்பை முடித்துள்ள அவர் இசைத்துறையில் மேற்படிப்புக்காக லண்டன் செல்ல உள்ளார் . அவரின் முதல் பாடல் பக்தி பாடலாக இருக்க வேண்டும் என நினைத்தார் . இந்தப் பாடலை உருவாக்கும் முன்பு, தாத்தா இளையராஜாவிடம் சில ஆலோசனைகளை கேட்டார் . வரிகள் எழுதுவதற்கு அவரின் தந்தை கார்த்திக் ராஜா உதவினார்.
"தாத்தா, அப்பா போல எனக்கும் சினிமாவில் இசையமைக்க ஆர்வம் இருக்கிறது. நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்” என்றார் யத்தீஸ்வரர் ராஜா.