இசைஞானி இளையராஜா சிறப்பு தபால் தலை -எந்த நாட்டில் தெரியுமா ?

ilaiyaraja-22

இசை உலகில் தனது அரிய மேதைமையால் அரை நூற்றாண்டைக் கடந்த இசைஞானி இளையராஜா, தற்போது ஆஸ்திரேலியாவில் தனது பிரம்மாண்ட இசைச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக ரசிகர்களை தனது இன்னிசையால் கட்டிப்போட்டு வரும் இவருக்கு, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க கவுரவம் வழங்கப்பட்டுள்ளது.
சினிமாவில் தனது 50 ஆண்டுகால பொன்விழா இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், இளையராஜாவின் புகழைப் போற்றும் விதமாக ஆஸ்திரேலிய அரசு சார்பில் சிறப்பு தபால் தலை (Ceremonial Stamp) வெளியிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்த பெருமைமிக்க விழாவில், விக்டோரியா மாகாணத்தின் நிதித்துறை அமைச்சர் என்வர் எர்டாகன் (Enver Erdogan) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. இந்த தபால் தலையை இளையராஜா அவர்கள் நேரில் பெற்றுக்கொண்டார்.

Share this story