இளையராஜா பயோபிக் படப்பிடிப்பு குறித்த அப்டேட்

ilayaraja

இளையராஜாவின் பயோபிக் படப்பிடிப்பு அடுத்த ஆண்டின் இரண்டாம் பாதியில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  
இசைஞானி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இந்த படத்தில் நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்க உள்ளார். கேப்டன் மில்லர் படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்க இருக்கிறார். இதனை கனெக்ட் மீடியா, பிகே பிரைம் ப்ரொடக்ஷன்ஸ், மெர்குரி மூவி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பதாகவும் இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க உள்ளதாகவும் ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.

ilayaraja

இருப்பினும் தனுஷ் தொடர்ந்து பல படங்களில் பிசியாக இருப்பதால் இந்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை தொடங்கப்படவில்லை. அதே சமயம் இந்த படம் கைவிடப்பட்டதாகவும் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. இந்த நிலையில் இளையராஜாவின் பயோபிக் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு மேல் தொடங்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் நடிகர் தனுஷ் தான் கமிட்டாகி இருக்கும் படங்களை முடித்துவிட்டு இளையராஜாவின் பயோபிக் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story