பிரதமர் மோடியை சந்தித்த இசைஞானி இளையராஜா...!

ilaiyaraja

இசைஞானி இளையராஜா பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். 

 

இசைஞானி இளையராஜா 35 நாட்களில் எழுதி முடித்த முழு சிம்பொனியை  ‘வேலியன்ட்’ எனும் தலைப்பில் கடந்த 8ஆம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் அரங்கேற்றினார். இதன் மூலம் ஆசிய கண்டத்தில் சிம்​பொனியை எழு​தி, சர்வதேச அளவில் அரங்​கேற்​றிய முதல் இசையமைப்பாளர் எனும் வரலாற்றுச் சாதனையைப் படைத்​தார்.  



இதனைத் தொடர்ந்து லண்டனில் இருந்து தமிழகம் திரும்பிய இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு இளையராஜா சந்தித்த முதல்வர் ஸ்டாலின் சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்தி மாபெரும் சாதனை படைத்ததாகக் கூறி பாராட்டு தெரிவித்தார். மேலும் இளையராஜாவின் நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம் எனவும் கூறியிருந்தார்.  


இந்த நிலையில் பிரதமர் மோடியை இளையராஜா சந்தித்து தனது சிம்பொனி தொடர்பாக வாழ்த்து பெற்றுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த இளையராஜா, “பிரதமர் மோடியுடன் மறக்கமுடியாத சந்திப்பு. எனது சிம்பொனி ‘வேலியன்ட்’ உட்பட பல விஷயங்களைப் பற்றி நாங்கள் பேசினோம். அவரது பாராட்டையும் ஆதரவையும் பணிவுடன் பெற்றுக் கொண்டேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Share this story

News Hub