இளையராஜாவின் அண்ணன் மகன் மறைவு... திரையுலகில் தொடரும் சோகம் !

shivan

இளையராஜாவின் அண்ணன் மகன் பாவலர் சிவன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். 

இசையுலகில் முடிசூடா மன்னனாக வலம் வருபவர் இளையராஜா. ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்துள்ள அவர் பலமொழி ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளார். இளையராஜாவை போன்று அவரது குடும்பத்தினரும் இசையுலகில் பணியாற்றி வருகின்றனர். 

அந்த வகையில் இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் இசையமைப்பாளராக பணியாற்றி வந்தார். பன்முக திறமைக் கொண்ட அவர், பாடலாசிரியர், பாடகர், நாடக எழுத்தாளர் என பல திறமைகளோடு செயல்பட்டு வந்தார். ஆரம்ப காலங்களில் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றி வந்த அவர் கடந்த 1973-ஆம் ஆண்டு மரணமடைந்தார். 

இந்நிலையில் பாவலர் வரதராஜனுக்கு சிவன் என்ற மகன் இருந்தார். பிரபல கிட்டார் கலைஞராக பணியாற்றி வந்த அவர், இளையராஜாவோடு சேர்ந்து பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.‌ புதுச்சேரியில் உள்ள இல்லத்தில் வசித்து வந்த அவர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Share this story