திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோயிலில் இளையராஜா சாமி தரிசனம்...
Sun Mar 16 2025 11:33:29 AM

கும்பகோணத்தில் உள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோயிலில் இசைஞானி இளையராஜா சாமி தரிசனம் செய்தார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, சமீபத்தில் லண்டனில் 'வேலியண்ட்' சிம்பொனியை அரங்கேற்றம் செய்து சாதனை படைத்துள்ளார். இதையொட்டி திரையுலகினரும், ரசிகர்களும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், கும்பகோணம் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி ஆலயத்தில் ராகு பகவானை இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம் செய்துள்ளார்.
தஞ்சை மண்ணில் திடீர் என்ட்ரி கொடுத்த இளையராஜா... மனமுருகி கடவுள் முன் நின்ற காட்சி#Ilaiyaraaja | #thanjavur pic.twitter.com/aJpT09yAai
— Thanthi TV (@ThanthiTV) March 16, 2025