அகத்தியா படத்தில் ரீமேக் செய்யப்பட இளையராஜாவின் 'என் இனிய பொன் நிலாவே' பாடல் ரிலீஸ்

அகத்தியா படத்தில் ரீமேக் செய்யப்பட இளையராஜாவின் 'என் இனிய பொன் நிலாவே' பாடல் வெளியாக உள்ளது.
’ஆசை ஆசையாய்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜீவா. இவர் ’சிவா மனசுல சக்தி, கற்றது தமிழ், கொரில்லா, ரவுத்திரம், கலகலப்பு 2 போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். கடைசியாக இவர் பிளாக் படத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தையடுத்து ஜீவா, பா.விஜய் இயக்கத்தில் 'அகத்தியா' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் அர்ஜுன், ராஷி கன்னா, யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
Play. Repeat. Relive. 🎧 “En Iniya Pon Nilavae”is finally here! Experience the perfect blend of nostalgia and new-age music. Hit play and drift into the melody! 🎶💙#Eniniyaponnilave Out Now
— Aghathiyaa (@aghathiyaa) February 25, 2025
🔗 https://t.co/tIA6JxLTDM#Aghathiyaa in cinemas from Feb 28 Worldwide pic.twitter.com/IVSSRDfBjq
இப்படத்தின் முதல் பாடலான 'காற்றின் விரல்' பாடல் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இசைஞானி இளையராஜாவின் பாடலான 'என் இனிய பொன் நிலாவே' பாடலை ரீ-கிரியேட் செய்துள்ளார் இசையமைப்பாளர் யுவன். இப்பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.