பேபி பம்புடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை 'இலியானா டிகுரூஸ்'.

photo

பிரபல நடிகையான இலியானா டிகுரூஸ் சமீபத்தில் தான் கர்பமாக இருக்கும் தகவலை ரசிகர்களுக்கு அறிவித்த நிலையில் தற்போது பேபி பம்ப் உடன் இருக்கும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

photo

2006ஆம் ஆண்டு வெளியான ‘கேடி’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தவர் இலியானா.  தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் – விஜய் கூட்டணியில் வெளியான ‘நண்பன்’ படத்தில் பெல்லி நடனமாடி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.  இதற்கு முன்னர் இந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தகக்கது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, புகைப்பட கலைஞரான ஆண்ட்ரூ நீபோன் என்பவருடன் தொடர்பில் இருந்து வந்தார், ஆனால் 2019ஆம் ஆண்டு அதனை முறித்துக்கொண்டார்.

photo

தற்போது ஹிந்தி  நடிகையான காத்ரினா கைப் சகோதரர் செபாஸ்டியன் லாரன்ட் மைக்கேல் என்பவரைக் காதலித்து வருவதாக செய்திகள் வெளியானது. தொடர்ந்து இலியானா தான் கர்பமாக இருப்பதை அறிவித்து ரசிகர்களுக்கு சப்பிரைஸ் கொடுத்தார். இந்த நிலையில் பேபி பம்ப் உடன் இருக்கும் புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Share this story