" நான் என்ன கசாப்பு கடையா வைச்சிருக்கேன்.." செல்ல பெயர் குறித்து ஏ.ஆர். ரகுமான் பகிர்வு...!

arr

சமூக வலைதளங்களில் ‘பெரிய பாய்’ என்ற பெயரில் அழைக்கப்படுவது தனக்கு பிடிக்கவில்லை என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

தற்போது கமல்ஹாசன் - மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் இணைப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தக் லைஃப்’ . ஜூன் 5ஆம் தேதி வெளியாக உள்ளது. பாடல்கள் மே 24-ம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.‘தக் லைஃப்’ படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக ஏ.ஆர்.ரஹ்மானை டிடி பேட்டி எடுத்துள்ளார். அந்தப் பேட்டியில் “பெரிய பாய் பாட்டுக்கு யார் நோ சொல்வார்கள்” என்று பேச்சில் குறிப்பிட்டார். அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் “பெரிய பாயா?” என்று சிரித்தார்.



உடனே டிடி “உங்களுக்கு தெரியாதா... சமூக வலைதளத்தில் உங்களுடைய பெயரே அதான்” என்றார். அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் “வேணாம். எனக்குப் பிடிக்கலை. பெரிய பாய், சின்ன பாய்னு. நான் என்ன கசாப்பு கடையா வச்சுருக்கேன்” என்று பதில் அளித்துள்ளார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.சமூக வலைதளத்தில் பலரும் ஏ.ஆர்.ரஹ்மானை குறிப்பிடும் போது ‘பெரிய பாய்’ என்றுதான் செல்லமாக கூறுவார்கள். இதைத்தான் தனக்கு பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.


 

Share this story