"தெரியாம லைக் போட்டுட்டேன் மன்னிச்சுடுங்க"... பகிரங்க மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்...

"தெரியாம லைக் போட்டுட்டேன் மன்னிச்சுடுங்க"... பகிரங்க மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்... 

இயக்குநரும், நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன், மன்னிப்பு கோரி சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

போடா போடி படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். அதை தொடர்ந்து, நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கி இருக்கிறார். இதனிடையே, நானும் ரவுடி தான் படப்பிடிப்பின்போதே காதலிக்கத் தொடங்கிய விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடி கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

https://twitter.com/VigneshShivN/status/1711024745033125972

இதை தொடர்ந்து, இரட்டை ஆண் குழந்தைகளுக்கும் அவர்கள் பெற்றோர் ஆகினர். தற்போது, பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் புதிய படம் இயக்கி வருகிறார். இந்நிலையில், நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜை விமர்சிக்கும் வகையில் வெளியான ட்வீட் மற்றும் மீம்களை விக்னேஷ் சிவன் லைக் செய்ததாக சர்ச்சை கிளம்பியது. 

இது தொடர்பாக மன்னிப்பு கேட்டுள்ள இயக்குநர் விக்னேஷ் சிவன், சமூக வலைதளத்தில் விளக்கமும் அளித்துள்ளார். அதன்படி, லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய்யின் படத்தை பார்த்ததும், முழுமையாக படிக்காமலேயே லைக் போட்டுவிட்டதாகவும், எந்த உள்நோக்கத்திலும் செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இருப்பினும், தவறு என்னுடையது என்றும், கவனமாக இருந்திருக்க வேண்டும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மற்ற ரசிகர்களை போல விஜயையும், லோகேஷையும் மிகவும் பிடிக்கும் எனவும், அவர்கள் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வெற்றி அடைய வாழ்த்துகள்  என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். 


 

Share this story